சிறுவர் தின நிகழ்வானது உலக நாடுகளில் வாழ்கின்ற சிறுவர்க ளிடையே புரிந்துணர்வையும், தூரநோக்கான பொது நல திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்குமென ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானப்படி ஒவ்வொரு ஆண்டும் ஒவ்டோபர் மாதம் (01) முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினமாக கொண்டாடப்படுகின்றது.
18 வயதுக்குட்பட்ட எல்லோரும் சிறுவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இன்றைய சிறுவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரம், அவர்களின் எதிர் காலத்தை நல்வழிப்படுத்தும் வகையில் சிறப்பாக திட்டமிட்டு நெறிப்படுத்த வேண்டும்.
சிறுவர்கள் மனித சமூகத்தின் உயிர் நாடி, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டும். பெற்றோர், பாதுகாவலர்கள், ஆசான்கள், மதத்தலைவர்கள் இதில் முக்கிய வகிபாகமுள்ளவர்கள்.
உரிமைகள் மீறப்படாமல் நற்பிரஜை களாக வளர்த்தெடுப்பதும் அவர்களுக்கு கல்வி, சுகாதாரம், நற்பண்பு, நல்லொழு க்கம், நல்ல சிந்தனை ஊட்டப்பட்டு நவீன காலத்துக்கேற்றவாறு அவர்களை அறிவுள்ள கட்டமைப்புடனான சமூகமாக தோற்றுவிப்பதே சிறுவர் தினத்தின் எதிர்ப்பார்ப்பாகும்.