சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு யாழ் ஒஸ்மானியக்கல்லூரியில் முன்பள்ளி சிறார்களில் சிறுவர்தின நிகழ்வுகள் இன்று(1) யாழ் ஒஸ்மானியாக்கல்லூரியில் முன்திடலில் முன்பள்ளி தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்..
இங்கு சிறார்களின் கலைப்பரிமாற்றங்களை வளர்ப்போம் சமூகத்தில் அவர்களையும் உயர்த்துவோம் என்னும் கருப்பொருளில் சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன..இதில் வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் மற்றும் சமூக செயற்றப்பாட்டாளர்கள் சிறார்கள் பலரும் கலந்துகொண்டனர்.