ஶ்ரீ சுபத்திரா ராம முன்பள்ளி மாணவர்களின் சிறுவர் தின நிகழ்வு

பாறுக் ஷிஹான்-
சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஶ்ரீ சுபத்திரா ராம முன்பள்ளி மாணவர்களின் சந்தை திறப்பு இன்று (01.10.2018) காலை சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரத்ன தலைமையில் நடைபெற்றது.

இதில் அதிதிகளாக கலந்து கொண்டவர்கள் கல்வி கற்கும் உரிமை சிறுவர்களுக்கு உண்டு இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்தை ஒழிப்போம் போன்ற வாசகங்கள் கொண்ட உரைகளை முன்பள்ளி மாணவர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக நிகழ்த்தி இருந்தனர்.

அங்கு கருத்து தெரிவித்த கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்  ஒரு சிசு கருவுற்றது முதல் ஐந்து வயது வரையிலான காலப்பகுதி ஆரம்ப பிள்ளைப் பருவம் ஆகும். மனித மூளையின் 90 வீதம் வளர்ச்சி இக் காலப்பிரிவில் தான் நடைபெறுகின்றது. எனவே ஒரு பிள்ளைக்கு இக் காலப்பிரிவில் கிடைக்கப் பெறும் அன்பும் மகிழ்ச்சியும் மூளை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பது அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அன்பையும் மகிழ்ச்சியையிலும் தங்கி உள்ளதாக குறிப்பிட்டார்.
இது தவிர தாய் அல்லது தாய் தந்தை இருவரினாலும் வீதியோரங்களில் குப்பைத் தொட்டிகளில் சாக்கடையிலும் கூட கைவிடப்படுகின்றன எனவும் இப் பிறப்புக்களில் அனேகமானவை தகாத உறவின் மூலம் பிறந்தவர் ஆவர்.எனவே சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற பணி சுய ஒழுக்கம் பண்பாடு மற்றும் ஆண் பெண் உறவு முறை ஆகியவற்றைப் பேணுவதிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் வாஹீட் சிறுவர் உரிமை உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.






















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -