எஸ்.அஷ்ரப்கான்-
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் புதிய மாணவர்களுக்கான கராத்தே பயிற்சி வகுப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.
(International Martialarts Association) இனால் ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சி வகுப்பில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கராத்தே போதனாசிரியரும் கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் தலைவருமான முஹம்மத் இக்பால் மாணவர்களுக்கான ஆரம்ப பயிற்சியினை வழங்கினார்.
கராத்தே போதனாசிரியர் முஹம்மத் இக்பாலின்
சிரேஷ்ட மாணவரான, போதனாசிரியர் ஏ. இர்ஷாத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப பயிற்சி வகுப்பின்போது பாடசாலையின் 80 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது சிரேஷ்ட மாணவரான ஏ.இர்ஷாதிற்கு போதனாசிரியருக்கான சான்றிதழ் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கராத்தே போதனாசிரியர் முஹம்மத் இக்பாலினால்வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.