தொழிற் பயிற்சி ஆரம்ப விழாவில் பிரதியமைச்சர் காதர் மஸ்தான்.
செய்யும் தொழில்களில் அனுபவமும் தேர்ச்சியும் இன்றியமையாததாகும்.
சிறந்த தொழில்வாண்மை, தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையினால் சிறந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு தொழில் துறைகளில் இணைக்கப்படுவதால் அவர்கள் கீர்த்தி பெற்றவர்களாக விளங்குகிறார்கள்.
இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.
வவுனியா தேசிய தொழில் பயிற்சி அதிகார சபைக்கு புதிய மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது விண்ணப்பித்தவர்களில் சுமார் 250 பெயரளவில் பயிற்சி தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். வவுனியாவில் உள்ள தனியார் துறைகளில் சுமார் 400 வெற்றிடங்கள் இருக்கின்றன.
சுகாதாரத்துறை, கட்டுமானத்துறை, சுற்றுலாத்துறை,ஹோட்டல் துறைகளில் இன்று பல்வேறுபட்ட வேலை வாய்ப்புக்கள் நிலவுகின்றன.
கற்று விட்டு தொழில்வாய்ப்புக்களை எதிர்நோக்கியிருக்கும்
இந்த துறைகளில் சிறப்பு தேர்ச்சியடையும் பொழுது எமது எதிர்காலம் பிரகாசமடைகிறது எனவும் குறிபபிட்டார்.
வவுனியா நகர சபை கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்
வவுனியா அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா பிரதேச செயலாளர் உதயராசா தேசிய தொழில் பயிற்சி அதிகாரசபையின் பணிப்பாளர்,பயிலுநர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.