சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அக்கரப்பத்தனை ஹோல்புறூக் ரீ பப்ளிக்கேன் சர்வதேச பாடசாலையில் 01.10.2018 அன்று சிறுவர் தின நிகழ்வுகள் பாடசாலை அதிபர் ஸ்ரீ சத்தியவாணி தலைமையில் இடம்பெற்றது.
“சிறுவர்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை” என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றது, ஊர்வலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
ஊர்வலமானது அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு அக்கரப்பத்தனை மன்றாசி நகரம் வரை சென்றடைந்து மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
இந்நிகழ்வில் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்தஸ்ரீ, பிரிடோ நிறுனத்தின் இணைப்பாளர் கு.புஸ்பராஜ், பிரதேச செயலகத்தின் சிறுவர் அபிவிருத்தி பொறுப்பாளர் என பலரும் கலந்து கொண்டனர்.