கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் தொடர்பாக பொய்யான தகவல்களை கூறவேண்டிய எவ்வித தேவையும் எனக்கு இல்லை


கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை

எம்.ஜே.எம்.சஜீத்-
கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் தொடர்பாக பொய்யான தகவல்களை தெரிவிக்க வேண்டிய எவ்விதமான தேவையும் தனக்கு இல்லை என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் முன்னாள் பிரதித் தலைவரும் அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் மேற்படி விடயம் தொடர்பான பத்திரிகை செய்தி தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவிய போது கீழ்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியினை அண்மையில் நான் இராஜினாமா செய்ததன் பின்னர் எனது இராஜினாமா தொடர்பாக பொய்யான குற்றச்சாட்டுக்கள் எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் அட்டாளைச்சேனை தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் இருவரை கிழக்கு வாசலுக்கு அழைத்து, புதிதாக கட்சி அமைப்பதற்கு 30மில்லியன் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயத்தில் சட்டத்தரணி பஹ்ஜி அவர்களும் , முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விபரங்களை கேட்ட கட்சி முக்கியஸ்தர்கள் இருவரும் இந்த விடயங்களை நம்பமுடியாமல் உள்ளது. இது ஒரு கட்டுக்கதையாக இருக்கலாம் கவனமாக ஆராயுங்கள் என்று கூறியபோதும் தலைவர் அவர்கள் இல்லை இது உண்மையாகவே நடந்துள்ளது என தெரிவித்;துள்ளார்.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் அவர்கள் எனது உறவினர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு – அமைச்சர் ரிசாத் பதியுதினுடன் உதுமாலெப்பை இணைவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று முடிந்துவிட்டது என்றும், என்னால் உதுமாலெப்பையை தொடர்பு கொள்ள முடியாமல் உள்ளது. அமைச்சர் ரிசாத் பதியுதினை சந்திக்க ஹோட்டலுக்கு செல்லும் போது எனக்கு அழைப்புத்தாருங்கள் நானும் அந்த ஹோட்டலுக்கு வருகின்றேன் என்று 0777401458 இந்த இலக்கத்தினூடாக தெரிவித்துள்ளார்.

இந்த தொலைபேசி செய்தியினை அட்டாளைச்சேனை தேசிய காங்கிரிஸின் முக்கியஸ்தர்கள் இருவர் கிழக்கு வாசலுக்கு சென்று தலைவர் அதாஉல்லா அவர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் சுபையிர் அவர்கள் தொலைபேசியில் தெரிவித்த விபரங்களை கூறியுள்ளனர். இந்த விபரங்களை கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர் அதாஉல்லா அவர்கள் இந்த விடயங்கள் நானும் முன்னாள் சுகாதார அமைச்சர் சுபையிரும் இணைந்து மேற்கொண்ட நாடகமே என தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் சுபையிர் அவர்கள் தேசிய காங்கிரஸின் முக்கிஸ்தரான சட்டத்தரணி பஹீஜ் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதுமாலெப்பை அவர்கள் தற்போது கொழும்பில் அமைச்சர் ரிசாத் பதியுதினோடு இணைந்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தனக்கு மிகுந்த மனவேதனையை தருவதாக கூறிய உதுமாலெப்பை அவர்கள் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்..

நானும் தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை முக்கியஸ்தர்கள் சிலரும் கிழக்கு வாசலில் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களுடனும் , தேசிய காங்கிரஸின் அதிஉயர்பீட உறுப்பினர்கள் சிலரும்;; கலந்து கொண்ட கலந்துரையாடலின் போது, '30 மில்லியன் பணம் வழங்கப்பட்டு புதிய கட்சி ஒன்றை பதிவு செய்வது' தொடர்பான அபாண்டமான தகவல் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதன் பின்னர், தலைவர் அவர்கள் அச்செய்தியினை கேள்வியுற்றதன் பின்னர் தானும் முக்கியஸ்தர்களிடம் சொன்னதாகக் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலின் பின்னர் டாக்டர் உதுமாலெப்பையையும் என்னையும் தலைவர் அழைத்து 03 பேரும் முக்கியமான விடயங்களை தனியாக பேசுவோம் என்று தெரிவித்தார். இதற்காக நானும் தலைவரும்; கூட்டத்திலிருந்து எழுந்து செல்லும் வேளையில், முன்னாள் அமைச்சர் சுபையிர் எனக்காகத்தான் இந்த விடயத்தினை செய்தார் என்றும் இந்நடவடிக்கை தொடர்பாக தங்கள் வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் சுபையிர் பற்றி நீங்கள் பேசியமை எனக்கு சரியான கவலை என தலைவர் தெரிவித்தமை என் மீதான விசுவாசத்தில் தலைவரின் சந்தேகத்தையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறு இருக்கத்தக்கதாக, முன்னாள் அமைச்சர் சுபையிர் நான் பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் நான் சிறுபிள்ளைத்தனமாக செயற்படுவதாகவும் பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டிருப்பது குறித்து நான் ஆச்சரியப்படுகின்றேன்.
சுகவீனம் நிமிர்த்தம் நான் கொழும்பில் சிகிச்சை பெற்று வந்தவேளை முன்னாள் அமைச்சர் சுபையிர் அவர்கள் தான் கொழும்பில் இருந்துகொண்டும் ஒரு தடவையேனும் என்னை சுகம்விசாரிக்க வருகைதராத பட்சத்தில் தேசிய காங்கிரஸின் பாலமுனைப் பிரகடனத்தின் போது நான் கூறாத பல விடயங்களை கூறியதாக ஆயிரக்கணக்;கான மக்கள் மத்தியில் தெரிவித்தமை முன்னாள் அமைச்சரின் நேர்மையீனத்தை வெளிப்படுத்துவதோடு, அவரது அரசியல் பக்குவமின்மையையும் பறைசாற்றுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் நூற்றுக் கணக்கான அரசியல்வாதிகள் இருக்கத்தக்கதாக முன்னாள் அமைச்சர் சுபையிர் அவர்களினுடைய பெயர் மட்டும் தேசிய காங்கிரஸூக்குள் இயங்கும் சதிகார குழுவில் இடம்பெற்றுள்ளமை குறித்து கட்சியின் தலைமை மீட்டிப்பார்க்க வேண்டிய தேவையுள்ளது.
நாங்கள் கட்சிக்குள் இருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது, இன்னொரு கட்சியை பிளவுபடுத்தி சதிகார பணியில் ஈடுபட்ட வரலாறு ஒருபோதும் எங்களுக்கு கிடையாது. அதற்கு இறைவன் சாட்சியாக இருக்கின்றான். தேசிய காங்கிரஸில் ஒரு காலத்திலும் இல்லாத பாரிய பிளவுகளும் , சதிகளும் ஏற்படுவதற்கான பிரதான காரணம் - வேறு கட்சிகளின் முக்கியஸ்தர்கள் அவர்களின் அரசியல் எதிரிகளை பழி தீர்ப்பதற்கு தேசிய காங்கிரஸின் தலைவருக்கு பொய்யான, அபாண்டமான தகவல்களை வழங்கி, அதனை கட்சியின் தலைமையும் நம்பிக்கை கொள்ளுமளவிற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் செயற்பாடானது ஒற்றுமையினை அழிப்பதற்கான கூட்டு சதிமுயற்சியே இதுவாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -