அல்ஹிதாயா பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் கொழும்பு- 10 அல்ஹிதாயா கல்லூரியில் கடந்த வருடம் க.பொ.த. சாதாரண தர, உயர் தரப் பரீட்சைகளில் திறமைச் சித்திகளுடன் சித்தியடைந்த மாணவ மாணவிகள் மற்றும் இவ்வருடம் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழாநேற்று சனிக்கிழமை (20.10.2018) மாலை கொழும்பு- 10, அல்ஹிதாயா கல்லூரியின் எம்.ஸீ. பஹார்தீன் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர் எம்.என்.எம். நிஹார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியும் கௌரவ அதிதியாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் விஷேட அதிதிகளாக மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.ஜே.எம். பாயிஸ், எம். அர்ஷாத் நிஸாம்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.