அரசாங்கத்தை மாற்றியமை தொடர்பில், சட்ட நிலைப்பாட்டினை கூற முடியாது:


சட்ட மா அதிபர்!

பிரதமர் பதவி மற்றும் அரசாங்கத்தை மாற்றியமை தொடர்பில், சட்டரீதியான நிலைப்பாட்டை அறிவிக்க முடியாதுள்ளதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

கடிதமொன்றின் ஊடாக இந்த தகவலை அவர் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில், சட்டரீதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு, கடந்த 27ஆம் திகதி சட்டமா அதிபருக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கடிதம் அனுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள சட்டமா அதிபர்;

அரசியலமைப்பின் கீழ் சட்டமா அதிபர் என்ற ரீதியில், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை குறித்து அறிவிப்பை விடுப்பது பொருத்தமற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -