தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம்; மருதமுனையில் விசேட பரிசோதனை நடவடிக்கை..!

அஸ்லம் எஸ்.மௌலானா-
சுகாதார அமைச்சின் தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் மருதமுனை பிரதேசத்திலுள்ள வீடுகளில் இன்று திங்கட்கிழமை (01) விசேட பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நுளம்புகள் பெருகக்கூடிய கழிக்கப்பட்ட பிளாஸ்ட்ரிக் பாத்திரங்கள், போத்தல்கள், சிரட்டைகள், தயிர் மற்றும் யோகட் டப்பாக்கள் உள்ளிட்ட கொள்கலன்கள் கல்முனை மாநகர சபையின் அனுசரணையுடன் சேகரித்து அகற்றப்பட்டன.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ்விசேட நடவடிக்கையின்போது கல்முனை தெற்கு பிரிவுக்கான மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பரிசோதனைகளில் ஈடுபட்டதுடன் சூழல். சுற்றாடல் சுத்தம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -