கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக எம்.கே.எம்.மன்சூர் நியமனம்.


பி.எம்.எம்.ஏ.காதர்-
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக மருதமுனை எம்.கே.எம்.மன்சூர் நியமிக்கப்ட்டுள்ளார்.உடனடியாகச் செயற்படும் வண்ணம் கிழக்கு மாகாண ஆளுணர் ரோகித்த போகொல்லாகம இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய எம்.ரி.அப்துல் நிஸாம் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் நாளை புதன்கிழமை(03-10-2018தனது கடமையைப் பொறுப்பேற்கின்றார்.
1961.08.21ஆம்; திகதி பிறந்த இவர் கிளிநொச்சி இந்த மகா வித்தியாலயம், மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி,கல்முனை கார்மேல் பாத்திமாக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவரும்,கிழக்குப் பல்கலைக் கழக விஞ்ஞானப் பட்டதாரியுமாவார்.
1985.12.04ஆம் திகதி ஆசிரியர் நியமனம் கல்முனை ஸாஹிராக் கல்லூயில் கடமையேற்றார்.அதன் பின்னர் 1993ஆம் ஆண்டு கல்வி நிருவாக சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று அட்டாளைச் சேனை கல்விக் கல்லூரியிலும்,அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் விரிவுரையாளராகவும் 2007ஆம் ஆண்டுவரை கடமையாற்றினார்.

மேலும் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளராகவும்,மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராகவும்,கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செலாளராகவும், மேலதிகச் செயலாளராகவும், கடமையாற்றியுள்ளார். இறுதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் கடமையாற்றி நிலையிலேயே இவருக்கு இந்த கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கனாடா யோக் பல்கலைக் கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று தனது கல்வி முதுமானிப் பட்டத்தை முடித்துள்ளார்.கல்வி தொடர்பான பெறுமதி மிக்க மூன்று நூல்களை இவர் வெயிட்டுள்ளார்.உயிரியல் விஞ்ஞானத் துறையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சிறப்பாகக் கற்பிக்கும் ஆசானுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -