மாவடிப்பள்ளி அல்-ரஹ்மானியா பாலர் பாடசாலை மாணவர்களின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு பாடசாலை வளாகத்தில் இன்று சிறப்பாக இடம் பெற்றது.
இந்நிகழ்வு அல்-ரஹ்மானியா பாலர் பாடசாலையின் தலைவர் ஏ.எம்.அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பாடசாலை ஆசிரியர்களான எம்.ஐ.எஸ்.நெளபி, எம்.பர்வின், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்வுகள் மற்றும் சிறுவர் தின பரிசு பொதிகளும் மாணவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.