மூதூர் பிரதேச செயலகத்தினால் தோப்பூர் பிரதேசத்தில்நடமாடும்சேவை

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை, மூதூர் பிரதேச செயலகத்தினால் தோப்பூர் பிரதேசத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி நடமாடும்சேவையொன்று நடாத்தப்படவுள்ளதாக பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

காலை 9.00மணிக்கு ஆரம்பமாகும் இச்சேவை மாலை 4.00மணிவரை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் எம்.முபாரக் தலமையில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு ,இறப்பு பதிவு ,அடையாள அட்டை உள்ளிட்ட செயலகத்தின் மூலம் வழங்கப்படும் பல சேவைகள் தொடர்பான பிரச்சனைகள் உள்ள பொதுமக்கள் இந்நடமாடும்சேவையின் மூலம் பயன்பெறமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான பலதுறை சார் அதிகாரிகள் பெருமளவில் கலந்துகொண்டு மக்களின் பிரச்சனைகளுக்கு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளனர்.

தோப்பூர் பிரதேசத்தின் சூழவுள்ள கிராம மக்கள் இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல பின்தங்கிய கிராம மக்களின் நலன்கருதி இதற்கான அனுசரணையை இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பு மேற்கொண்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -