வீதி அபிவிருத்தி மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சுக்களை எச்.எம்.எம்.ஹரீஸ் பெற்றுக்கொள்வதன் மூலம் கிழக்கின் அபிவிருத்திகளைச் செவ்வனே நிறைவேற்ற முடியும் என்பதுடன் கல்முனையில் இடம்பெற்றுள்ள இன்றைய பெரும் சர்ச்சையான நகர பிரதேச சபைகளின் பிரிப்புக்களையும் சரியாகச் செய்து கொள்ளலாம். எனவே புதிய பிரதமருடன் இணைந்து வருமாறு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கல்முனைத் தொகுதி பல தசாப்த்தங்களாக சரியான சேவைகளைக் காணவில்லை. மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூருக்குப் பின் கல்முனை அபிவிருத்தியில் இருந்து தூரமாக்கப்பட்டுள்ளது. அதனை இன்று கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பத்தினைப் பயன் படுத்தி ஹரீஸ் அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஆகவே பிரதமர் மகிந்தவின் புதிய அரசில் முழு அமைச்சொன்றினைப் பெறுவதின் மூலமே இச்சேவைகளைச் செய்யமுடியும் என்பதனைக் கருத்தில் கொண்டு அவசர முடிவொன்றினை எடுக்குமாறு முன்னாள் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீசுக்கு தகவல் அனுப்பப் பட்டுள்ளன.