தேசிய சமய சகவாழ்வு தொடர்பான பாராளுமன்றின் மகா நாடு அம்பாறையில்

ஹஸ்பர் ஏ ஹலீம்-
லங்கையின் தேசிய மற்றும் சமய சக வாழ்வுக்கான பாராளுமன்றக் குழுவின் இரண்டாவது பிராந்திய மகாநாடு இன்று (01) அம்பாறை மொண்டி ஹோட்டலில் இடம் பெற்றது.
இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இடம் பெற்று வரும் இவ் நிகழ்வில் இலங்கையின் நிலை பேறான தன்மைக்காக தேசிய மற்றும் மத ஒற்றுமை தொடர்பிலான விளக்கவுரைகள் இடம் பெற்றன.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் , சமாதானம், சகவாழ்வு தொடர்பிலான விடயங்களை கொண்டு செல்வதற்கான பாராளூமன்ற குழுவினுடைய நிகழ்வாகவும் அமையப் பெற வேண்டுமென்பதே இதன் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.
இதில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம , புனர் வாழ்வு மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சுற்றுலா அபிவிருத்தி கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க , தபால் தொலைத் தொடர்புகள் முஸ்லீம் விவகார அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீம், சமய நல்லிணக்க மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா உட்பட ,தமிழ் சிங்கள முஸ்லீம் மத குருமார்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -