கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவன் பார்சிலோனா பயணமானார்

ஹஸ்பர் ஏ ஹலீம்-தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட 12 வயதுக்குட்பட்ட உதைப் பந்தாட்ட போட்டியில் ரோட் டூ பார்சிலோனா போட்டியில் கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவன் கே.எம்.ஹதீம் தெரிவானார்.

தேசிய மட்ட போட்டியானது பதுளையில் இடம் பெற்றதையடுத்து இதில் இருந்து மீண்டும் இறுதி தெரிவானது அநுராதபுர மாவட்டத்தில் சுமார் 600 பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றியதில் ஆறு பேர் தெரிவு செய்யப்பட்டனர். இதில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் கே.எம்.ஹதீம் பார்சிலோனா நாட்டுக்கு செல்வதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுள்ளார்.
நேற்று (30) பயணமான ஆறு பேர் கொண்ட குழுவில் நான்கு நாட்கள் அங்கு தங்கியிருப்பதுடன் இன்று(01) முதல் எதிர் வரும் 04 ம் திகதி வரையில் இரு நாட்கள் அவர்களுக்கான குறித்த துறையில் பயிற்சியும் இன்னும் இரு நாட்கள் சுற்றுலா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொறுப்பான ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை உதைப் பந்தாட்ட சம்மேளனம் மற்றும் கல்வி அமைச்சும் இணைந்ததான இவ் விடயங்களை மேற்பார்வை செய்கின்றமையும் இதற்கான பூரண அனுசரனையினை மைலோ நிறுவனம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -