கிண்ணியா பெரியாற்று முனை ரேன்ஞர்ஸ் விளையாட்டு கழகத்தின் புதிய நிருவாகத் தெரிவும் புதிய மேலங்கி அறிமுக நிகழ்வும் இன்று (21) பெரியாற்று முனையில் உள்ள கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களின் இல்லத்தில் இடம் பெற்றது.
ரேன்ஞர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கான புதிய மேலங்கியை கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களிடம் HONDA நிறுவனத்தின் கிண்ணியா கிளையின் விற்பனை முகவர் JML ஸ்டோர்ஸ் உரிமையாளர் எம்.எல்.மொஹமட்( ஹிசோர்) வழங்கி வைத்து அறிமுகம் செய்து வைத்தார்.
இதனை தொடர்ந்து புதிய நிருவாக சபை தெரிவு இடம் பெற்றது.ரேன்ஞர்ஸ் விளையாட்டு கழகத்தின் செயலாளராக எஸ்.ஏ.மொஹமட் அலி, தலைவர்-நிஸார்தீன் முஹம்மட், பொருளாளர் எம்.இர்ஸாத், உதவி செயலாளர் எம்.ஈ.லாபீர், உதவி தலைவர் எம்.எஸ்.எம்.சுரைஸ், கழக இணைப்பாளராக கே.எம்.றிப்னாஸ்( டிலான்) ,அணியின் தலைவராக எம்.கே. அஜித்கான் போன்றோர்கள் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்கள்.
இவ் நிகழ்வில் மூத்த விளையாட்டு வீரர்கள், கழக இளைஞர் யுவதிகள் என பலரும் பங்கேற்றனர்கள்.