சீனி மற்றும் முக்கிய அத்தியாவசியப் பொருட்களின் மீதான சிறப்பு வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனி மீதான சிறப்பு வரி 10 ரூபாவலும் பருப்பு மற்றும் கடலை மீதான தீரவை 5 ரூபாவலும் உழுந்து மீதான தீரவை 25 ரூபாவாலும் கோதுமைத் தானியம் மீதான தீர்வை 3 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.
மேலும் தொலைதொடர்பு வரி 25%இல் இருந்து 15%ஆக குறைப்பு
தொழில்துறையில் உள்ளவர்களின் உழைப்பு மீதான வருமான வரி அறவீடு சதவீதத்திலிருந்து 14 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்தடன் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பேணப்படும் நிலையான மற்றும் சேமிப்புக் கணக்குகளிலிருந்து கிடைக்கும் வட்டி வருமானம் மீது விதிக்கப்படும் வரி முற்று முழுதாக நீக்கப்படுகிறது என்றும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -