கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தை புனரமைக்க கோரி வீதி மறியல் போராட்டம்



ஹஸ்பர் ஏ ஹலீம்-


கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலம் உடைந்து சேதமாக்கப்பட்ட பாலத்தை புனரமைக்கக் கோரிய கவனயீர்ப்பு போராட்டம் இன்று (02) குறிஞ்சாக்கேணி பாலத்தை மறித்து மறியல் போராட்டம் இடம் பெற்றது.

கிண்ணியா நகர சபையையும் பிரதேச சபையையும் இணைக்கும் இப் பாலம் ஊடாக நாளாந்தம் பலர் அச்சத்துடன் பயணம் செய்வதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். பாலம் கடத்த கால வெள்ள அனர்த்தத்தின் போது சேதமாக்கப்பட்டு இரண்டாக உடைந்து பயணம் செய்யாமை இருந்ததையிட்டு தற்காலிக பாலம் இரும்பு கம்பியினால் அமைக்கப்பட்டது இதனை தொடர்ந்து மற்றுமொரு பகுதி உடைந்து வீழ்ந்தது இதனால் பயணிப்பது மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.


கடந்த 2015 ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன குறிஞ்சாக்கேணி பாலத்தை தான் வெற்றி பெற்றதும் முதல் வேலைத் திட்டமாக செய்து தருவதாக கிண்ணியா கூட்டத்தின் போது வாக்குறுதி அளித்தார்.


ஆனாலும் கடந்த மூன்று வருடங்கள் கடந்தும் இது வரைக்கும் செய்து தரவில்லை தாங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு பாரிய அச்சத்துடன் இப் பாலம் ஊடாக பயணம் செயாய வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படுவதாக கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவித்தனர்.

பாலத்தை உடனடியாக செய்து தாருங்கள் ஏமாற்றாதே ஏமாற்றாதே என பலகோசங்களை கவனயீர்ப்பில் ஈடுபட்டோர்கள் தங்களது ஆதங்கஙாகளை தெரிவித்தனர்.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.ஹனி கவனயீர்ப்பு நடைபெற்ற இடத்திற்கு உடன் விரைந்ததுடன் இது தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். இதன் போது மஹஜர் ஒன்றும் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக் கவனயீர்ப்பில் இளைஞர் யுவதிகள்,சமூக ஆர்வலர்கள் , புத்யி ஜீவிகள் என பலரும் பங்கேற்றாய்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -