2006ம் ஆண்டு கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட மகரூப் நகரில் ஆரம்பிக்கப்பட்ட வாசிகசாலையானது 12 வருடங்களின் பின்னர் தற்போது கிண்ணியா நகர சபை உறுப்பினர் அனீஸ் அவர்களின் முயற்சியினால் நூலகமாக தரமுயர்த்ப்பட்டதாக இன்று புதன் கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கிண்ணியா மகரூப் நகர் வாசிகசாலையை தேசிய நூலக ஆவணமாக்கள் சபையின் கீழ் கொண்டுவந்து நூலகத்தரம் 3 ஆக உயர்த்தப்பட்டதாக கிண்ணியா நகர சபை உறுப்பினர் ஏ.எம்.அனீஸ் தெரிவித்தார்.குறித்த நூலகம் தரம் உயர்த்தப்பட்டதால் 5 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது,
ஏனைய பொது நூலகத்திற்கு ஒதுக்கப்படும் நிதி,ஏனைய ஒதுக்கீடுகள் உள்ளுராட்சி ஆனையாளர்,தேசிய நூலகத்திலிருந்தும் ஒதுக்கப்படும்.
விரைவில் 3 மாடிக்கட்டடத்தை அமைக்க தனக்கு வாக்குறுதி அளித்துள்ளதாகவும் இதன் போது உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
இந்த நூலகத்திற்கு 150 மாணவர்களை அங்கத்தவராக இணைத்துக் கொண்டிருப்பதுடன் 1000 மேல் பாடசாலை பயிற்சி புத்யகங்களை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் குறித்த உறுப்பினர் தெரிவித்தார்.