குருணாகல் மாவட்டத்தில் இருந்து இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 2017/2018 கல்வியாண்டிற்கான உள்வாரிப்பட்டதாரிகளாக தெரிவாகியுள்ள சகோதர சகோதரிகளை கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று முன்தினம் (2018.12.23)நடைபெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக குருணாகல் மாவட்ட பட்டதாரி மாணவர் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வுகுருணாகல், மாகாண சபை மண்டபத்தில் (provincial council auditorium) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் M.M. Najim பிரதம அதிதியாகக்கலந்துகொண்டதுடன், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீட மொழித்துறைத் தலைவிகலாநிதி M.A.S.F. Saadiya, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசாரபீட மொழித்துறைப் பேராசிரியர்M.M. Rameez Abdullah, இலங்கை தென்கிழக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட சிரேஷ்ட விரிவுரையாளர் F.H.A. Shibly, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியற்பீட மின் மற்றும் தொலைத்தொடர்பு துறை தலைவர் (electrical and tech communication) பொறியாளர் M. Murshi, அம்பாரை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் M.S.M. Shafras, மற்றும் தென்கிழக்குபல்கலைக்கழக கலாசார உதவி விரிவுரையாளர் M.M. Musthak ஆகியோர் சிறப்பு அதிதிகளாக வருகை தந்திருந்தனர்.
நிகழ்வின்போது வளவாளர்களாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் M.M. Najim, இலங்கைதென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவி கலாநிதி M.S.A.F. Saadiya, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகஇஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட சிரேஷ்ட விரிவுரையாளர் F.H.A. Shibly, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகபொறியியற்பீட பொறியாளர் M.Murshid, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைப் பேராசிரியர்M.M. Rameez Abdullah, சமூர்த்தி பணிப்பாளர் M.S.M. Shafras ஆகியோர் மூலம் மாணவர்களும் பெற்றோர்களும் தெளிவு படுத்தப்பட்டனர்.
மேலும் நிகழ்வுகளில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை இந்நிகழ்வின்முக்கிய அம்சமாக காணப்பட்டது. மேலும் 2017/2018ம் ஆண்டிற்கு தெரிவாகியுள்ள சகோதரச கோதரிகளுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.