28 பேருக்கு இராஜாங்க, பிரதி அமைச்சுக்கள்..

ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்னும் சற்று நேரத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தற்பொழுது ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இவர்கள் வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இன்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு இவர்கள் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன, கலாநிதி ஹர்ஷத சில்வா, அஜித் பீ. பெரேரா, ருவன் விஜேவர்தன, சுஜீவ சேனசிங்க, ஜே.சீ. அலவதுவல, வசந்த அலுவிகார, ரஞ்ஜித் அலுவிகார, அசோக அபேசிங்க, விஜயகலா மகேஸ்வரன், வடிவேல் சுரேஷ் , பைஸல் காஸிம் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் 28 பேர் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்துள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.டைமி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -