கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் இறக்காமம் அமீர் அலி புர 5ம் குறுக்கு வீதி புனரமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (23) இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் ஜெமீல் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.
இவ்வீதியானது குன்றும் குழியுமாக காணப்பட்டதனால் பிரதேசவாசிகள் உள்ளிட்ட பாதசாரிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நேக்கிவந்தனர். இது தொடர்பில் இறக்காம பிரதேச சபை உறுப்பினர் ஜெமீல் காரியப்பரினால் இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் கவனத்திற்கு கொண்டுவந்ததனைத் தொடர்ந்து குறித்த வீதி புனரமைப்புச் செய்யப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.