க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் திகதி அறிவிப்பு


ஐ. ஏ. காதிர் கான்-
டிசம்பர் 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முதற்கட்டப் பணி, இம்மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறும் நத்தார் தினத்தன்று, இந்தப்பணி இடம்பெற மாட்டாது. இதேவேளை, விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இரண்டாம் கட்டப் பணி, ஜனவரி மாதம் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இது தவிர, விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் தலைமை அதிகாரிகளுக்கான தெளிவுபடுத்தும் நிகழ்வு, எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறும்.
இதே நேரம், பரீட்சை முறைகேடுகள் தொடர்பில் ஐந்து சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், இவை தொடர்பில் பரீட்சைத் திணைக்களமும் பொலிஸாரும் தனித்தனியே விசாரணைகளை நடத்தவிருப்பதாகவும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -