மட்டக்களப்பு மாவட்டத்தில் இரானுவம் வசமிருந்த காணிகள் இன்று (27) கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகமவிடம் இரானுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த காணி ஒப்படைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண இரானூவ தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர கிழக்கு ஆளுனரிடம் இதற்கான காணி விடுவிப்புக்கான பத்திரங்களை ஒப்படைத்தார்.
மட்டகளப்பில் உள்ள 04 காணிகள் சுமார் 8.5 ஏக்கர் காணிகள் இதன் போது ஒப்படைக்கப்பட்டன.
எதிர் காலத்திலும் படைகள் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக கிழக்கு ஆளுனர் தெரிவித்தார்.
இவ் நிகழ்வில் இரானுவ உயரதிகாரிகள், ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்தன, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உட்பட பலர் பங்கேற்றார்கள்.