காரைதீவு – நிந்தவூர் எல்லையிலுள்ள வெட்டுவாய்க்கால் ஆற்றில் தென்பக்கமாக நிருமாணிக்கப்பட்டுவரும் 550மீற்றர்நீள அணைக்கட்டை காரைதீவு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தும் (27) மீண்டும் வேலைகள் ஆரம்பித்துள்ளன.
நீர்பாசனத்திணைக்கள அதிகாரிகள் இதுவிடயத்தில் காரைதீவு பிரதேச செயலாளரையோ தவிசாளரையோ கலந்தாலோசிக்காது மீளவும் கட்டுமான வேலைகளை ஆரம்பிக்க அனுமதியளத்திருப்பதையிட்டு மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆற்றின் மத்தியூடாக அணைக்கட்டு கட்டுவதற்கு திணைக்களம் அனுமதி
வழங்கியுள்ளதா? என்று தவிசாளர் கேட்டுள்ளார். அவ்வாறு கட்டுவதால்
வெள்ளகாலத்தில் இரு ஊர்களுக்கும் சிவன்ஆலயத்திற்கும் பாதிப்பு
ஏற்படுமென்று மக்களால் கூறப்பட்டுள்ளது.
மக்களது பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு மாறாக இவ்வேலை தொடர்வதையிட்டு தவிசாளர் கி.ஜெயசிறில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அம்பாறை அரச அதிபர் கிழக்கு ஆளுநர் ஆகியோரிடம் நீதிகோரி முறையிட்டுள்ளார்.