சம்மாந்துறையில் வரலாறு காணாத பழையமாணவர் நடைபவனி!




காரைதீவு நிருபர் சகா-

ம்மாந்துறை முஸ்லிம் ம த்திய தேசிய கல்லூரியின் 110ஆண்டுகள் நிறைவையொட்டி நேற்று முன்தினம் சனிக்கிழமை வரலாறு காணாத எழுச்சிபூர்வமான சென்றாலியன் நடைபவனி சம்மாந்துறையில் நடைபெற்றது.

கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் இந்நடைபவனியை ஏற்பாடு செய்திருந்தது.பழைய மாணவர்சங்கத்தின் தலைவரும் அதிபருமான முத்து இஸ்மாயில்; தலைமையில் இந்நடைபவனி மிகவும் கோலகலமாக உணர்வ்வுபூர்வமாக நடைபெற்றது.
பழையமாணவர்சங்கம் வெளியிட்ட சென்றாலியன் ரீசேர்ட்டை அணிந்துகொண்டு பல்லாயிரக்கணக்கான பழையமாணவர்கள் வலம் வந்தமை கண்கொள்ளாக்காட்சியாகஇருந்தது. இந்நிகழ்வில் குதிரை மாட்டுவண்டில் உழவுஇயந்திரங்கள் மற்றும் ஏனைய வாகனங்களும் கலந்துகொண்டன.


கல்லூரியன் பழைய மாணவர்களான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜ.எம் மன்சூர் வவுனியா மாவட்ட அரசாங்ன அதிபர் ஜ.எம்.ஹனிபா அமைச்சின் செயலாளர் எம்.ஜ.அமீர் தவிசாளர் எம்.எ.எம்.நௌசாட் உள்ளிட்ட பலமுக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்றார்கள்.

பழைய மாணவர்கள் பல்வேறு யுக்திகளைப்பயன்படுத்தி நடைபவனியைச் சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -