குட்டையைக் குழப்பி ஆதாயம் தேட நினைக்கும் இனவாதிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்!


ஒலுவில் ஜெலில்-
மாவனெல்லையில் புத்தர் சிலை தாக்கப்பட்ட சம்பவம் இன்று பெரும்பான்மை மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது!
உண்மையில் இப்படியான தரங்கெட்ட வேலையை யார் செய்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அமைதியை விரும்பும் இலங்கை நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் ஆதங்கமாகும்.

இன்று இந்த சிலைக்கு ஏற்பட்ட நிலமை நாளை முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கும் ஏற்படலாம்' இந்துக்களின் கோவில்களுக்கும் ஏற்படலாம்' இப்படி மாறிமாறி தொடர்ந்தும் சமூகங்களுக்கிடையில் அடிக்கடி மிகப் பெரிய பிரச்சினையை உண்டாக்குவதற்கு அவ்வப்போது சந்தர்ப்பங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும் என்பதே கசப்பான உண்மையாகும்.
இருந்தாலும் இந்த விடயத்தை யார் செய்தார்கள், எந்த சமூகத்தை சார்ந்தவர்கள் செய்தார்கள், எதற்காக செய்தார்கள் என்பதை பாதுகாப்பு தரப்பு இன்னும் உத்தியோக பூர்வமாக அறிவிக்காவிடினும்! பெரும்பான்மை மக்கள் மத்தியில்' அதிலும் குறிப்பாக இனவாதிகளுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்தையே இலக்கு வைத்து சில நகர்வுகள் நடந்து கொண்டிருப்பதை நாம் கண்ணூடாக பார்க்க கிடைப்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருப்பது மட்டுமல்ல" பெரும்பான்மை மக்கள் பகுதிகளில் வாழும் எமது சிறுபாம்மை முஸ்லிம் உறவுகளிடம் ஒருவித அச்ச நிலமை ஏற்பட்டுள்ளதையும் உணர முடிகிறது.
இந்த விடயத்தை ஒரு சிறிய விடயம் என்றோ, ஒரு பகுதிசாரார் பிரச்சினை என்றோ தள்ளி வைத்துவிட்டு அமைதியாக தூரத்தில் இருந்து கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது அவ்வாறு பார்க்கவும் கூடாது. இது இனவாதிகளிடம் பரவும் ஒருவித வைரஸ் ஆகும்.
அண்மைக் காலங்களாக எமது நாட்டின் அரசியல் மாற்றத்தில் மிகப்பெரிய ஒரு புரட்சி வெடித்து அரசாங்கத்தை அமைப்பதில் இழுபறி நிலமை தொடர்ந்து தற்போது ஒரு சாதாரண நிலமைக்கு திரும்பியைதை நாம் அனைவரும் அறிந்த தெரிந்த விடயமாகும்.
இருந்தாலும் நாட்டின் அரசியலில் இன்னும் உறுதியான நிலமை உருவாக வில்லை என்பதை மறைமுகமாக எமக்கு உணர்த்துகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஒரு பக்கம் வேண்டாத மனைவியின் கால் பட்டாலும் குற்றம் கை பட்டாலும் குற்றம் என்ற ஆட்சி" மறுபக்கம் எப்படியாவது ஆட்சியை பிடித்தே தீருவோம் என்றொரு கூட்டம் களத்தில்.
இவ்வாறு நாடு இருக்கும் வேளையில்தான் இப்படிபட்ட சம்பவம் இடம் பெற்றிருக்கிறது என்றால்' இதன் பின்னணியில் மிகப்பெரிய சதிக்கும்பல் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
இப்படியான சதிகார கூட்டம் அரசாங்கத்துக்கு உள்ளும் இருகலாம், வெளியிலும் இருக்கலாம், ஏன் சாதரன பொதுமகனாக கூட' பின்னணியில் யாராவது இருந்து இயக்கவும் படலாம்!இதை நாம் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இவர்களின் இலக்கு அரசியலாகவும் இருக்கலாம் அல்லது எமது சமூகமாக இருக்கலாம்! ஏனென்றால் கடந்த காலங்களை மீட்டிப் பார்ப்போமாக இருந்தால் சிறுபான்மை சமூகத்தை குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை தூண்டி விட்டு குளிர் காய்ந்தார்கள் என்பதை நாம் மறக்க முடியாது.

எது எப்படியோ "முள்ளில் துனி விழுந்தாலும் சரி' துனியில் முள்ளு விழுந்தாலும் சரி" பாதிப்பு ஏற்படப் போவது துணிக்குத்தானே தவிர' முள்ளுக்கு அல்ல! ஆகவே நாம் இங்கு துணியாக இருந்து பாதுகாத்துக் கொள்வதே அந்த பிரதேச மக்களுக்கு மட்டுமல்ல' முழு சமூகத்துக்குமே ஆரோக்கியமாகும்.
சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும் இனவாத கும்பலுக்கு இவ்வாறான விடயம் இன்னுமின்னும் சந்தோசத்தையே கொடுக்குமே தவிர பின்னடைவை கொடுக்காது! எனவே இந்த விடயத்தில் பெரும்பான்மை சமூகம் எவ்வாறு உற்சாகமாக உறுதியாக செயற்படுகிறார்களோ' அதைவிடவும் வேகமாகவும் நிதானமாகவும் எமது அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள் எல்லோரும் சேர்ந்து அவர்களோடு கைகோர்த்து உரியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும்வரை செயற்பட வேண்டும்.

அவ்வாறு கட்சி பேதங்களுக்கு அப்பால் கருத்து முரன்பாடுகளை ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு சமூகத்தின் எதிர்கால பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயற்படுவார்களானால் நிச்சயம் இதன் பின்னணியில் இயங்குபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது மட்டுமல்ல' பெரும்பான்மை பாமர மக்களிடம் இருக்கும் எம் சமூகம் மீதான தப்பான அபிப்பிராயத்தையும் ஓரளவேனும் களைவதோடு' எதிர்காலத்தில் இப்படியான விடயங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கும் உதவியாய் இருக்கும் என்பதே உண்மையாகும்.
எனவே இது சிறிய விடயம்தானே சட்டம் பார்த்துக் கொள்ளும் என்ற எண்ணத்தோடு' நாமும் அமைதியாக தூரத்தில் இருந்து கொண்டு அறிக்கையை மட்டும் விட்டுக் கொண்டு அரசாங்கத்தின் கையில் விட்டு விட்டு சோர்ந்து விடாமல்! முடிந்தவரை எமது பிரதிநிதிகள் பாதுகாப்பு தரப்பினருக்கும், குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் சிங்கள மக்கள் பிரதிநிதிகளுக்கும் பக்க பலமாக இருந்து! இந்த விடயத்தை நிதானமாக கையாண்டு வெற்றி கொள்வதே மூவின மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லதாகும்.
ஆகவே எம்மவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி, கூடுதல் நேரம் ஒதுக்கி உரிய விடயத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுக் கொடுத்து' நாட்டில் அமைதியை ஏற்படுத்தி மூவின சமூகமும் ஒற்றுமையாய் வாழ வழி வகுத்துக் கொடுக்க வேண்டும் என்பதை வேண்டுகிறோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -