அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
கடந்த அக்டோபர் 26ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதம மந்திரியாக தற்போதைய ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிரிசேன அவர்கள் நியமித்தது தொடக்கம் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட இந்த நாள் வரை நாட்டு நடப்பை விட உங்கள் ஆட்டத்தை அதிகம் கவனித்தவனாக பொறுமை காத்து இருந்தாலும், எதிர்க்கட்சி தலைவர் விடயத்தில் பாராளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டபின்னும் பொறுமையாக இருப்பது உங்கள் செயற்பாட்டை அங்கீகரிப்பதாகவும், நடிப்பை நம்புவதாகவும் ஆகிவிடும் என்பதால் பொறுமையிழந்து எழுதுகிறேன்.
இதை வாசிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் என்மீது கோபங்கொள்ளாமல் நீங்களும் ஏமாற்றப்படுகிறீர்களா, இல்லையா என்பதை சுயசிந்தனை செய்து பாருங்கள், நீங்களும் உங்களுக்குப் பட்டதை எழுதுங்கள்.
கௌரவ தலைவர் அவர்களே, நீங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரே தவிர ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் தலைவர் அல்ல என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள் என்று முதலில் வேண்டிக் கொள்கிறேன்.
அக்டோபர் 26ம் திகதியில் இருந்து கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் His Excellency, Sir என்றெல்லாம் இரகசியமாக பேசிக்கொண்டிருந்த நீங்கள் சர்வதேசத்தின் சதிவலைக்குள் சிக்கி உம்ரா என்ற பெயரில் துபாயூடாக சவூதி சென்றது தொடக்கம் ஜனாதிபதியையும், முன்னாள் பிரதமரையும் ஏசத்தொடங்கினீர்களே! இதன் இரகசியம் எல்லோருக்கும் தெரியாவிட்டாலும் என்னைப் போன்ற ஒரு சிலருக்கு புரிந்து விட்டது.
என்பது உங்களுக்குத் தெரியுமா?
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொதுஜன பெரமுனவில் சேர்ந்ததனால் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்து விட்டார் எனவே அவரை Mr.ராஜபக்ஷ என்று அழைப்பதாக , ஒரு சிலரை மகிழ்விப்பதற்காக சபையில் கூறினீர்களே! உங்கள் அறிவை எப்படி மெச்சுவது?
ஒரு கட்சி ஒருவரை கட்சியிலிருந்து விலக்கி அதனை பாராளுமன்ற செயலாளருக்கு அறிவித்தாலும் தனது உறுப்புரிமையை காப்பாற்ற அவருக்கு நீதிமன்றம் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை முன்மொழியும் போது உங்களுக்கும், கௌரவ சுமந்திரனுக்கும் எங்கேயிருந்து இவ்வளவு அறிவு வந்தது! அந்த அறிவுதான் உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தில் 70% - 30% என்றிருந்ததை 80% - 20% என்று மாற்ற வேண்டியதை 50% - 50% என்று கேட்டு 60% - 40% என மாற்றியதாக பெருமை பேசினீர்களே! அதன் பாதிப்பு பின்புதானே உங்களுக்கு புரிந்தது.
இது போலத்தான் உங்கள் அனைத்து செயற்பாடுகளும்.
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், முடிந்தால் சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள்.கண்டியில் உங்களது கட்சியில் தனித்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுங்கள், நிச்சயமாக அதன்பின் நீங்கள் கௌரவ அல்ல Mr. Rauf Hakeem தான்.
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், முடிந்தால் சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள்.கண்டியில் உங்களது கட்சியில் தனித்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுங்கள், நிச்சயமாக அதன்பின் நீங்கள் கௌரவ அல்ல Mr. Rauf Hakeem தான்.
நீங்களும் கௌரவ.சுமந்திரன் அவர்களும் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு ஒரு மூடிய அறையில் இருந்து முடிவெடுத்ததாக நீங்களும் அவரும் கலந்து கொண்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறிய போது அமைதியாக அதை அங்கீகரித்தீங்களே, இதற்கு யார் உங்களுக்கு அனுமதி தந்தது?
டயஸ்போரா உங்களைப் பயன்படுத்தலாம், அதில் உங்களுக்கு இலாபம் இருக்கலாம் சந்தோசம், ஆனால் கிழக்கு வடக்குடன் இணைவதென்றால் கிழக்கில் உள்ள மூன்று இனமும் விரும்ப வேண்டும். அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம், உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள், உங்கள் ஏமாற்றும், நடிப்பும், பாசாங்கும் சிலரை ஏமாற்றலாம் எல்லோரையும் அல்ல, படிப்படியாக ஒவ்வொன்றையும் வெளிப்படுத்துவேன். இப்போதைக்கு இது போதும்.
திருந்துங்கள் ஏனெனில் பல அப்பாவிகள் உங்களை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பாவம் அவர்கள் .........
அல்ஹம்துலில்லாஹ்.
திருந்துங்கள் ஏனெனில் பல அப்பாவிகள் உங்களை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பாவம் அவர்கள் .........
அல்ஹம்துலில்லாஹ்.