சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைகளில் ரயில் டிக்கெட்டுக்களை விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை, ரயில்வேத் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.
ரயில் டிக்கெட்டுக்களுக்காக ஒதுக்கப்பட்டு ஆசனங்களைப் பெறும்போது, அடையாள அட்டைகளைக் காண்பிக்கும் நடைமுறை கட்டாயமாக்கப்படவுள்ளதாக, ரயில்வே பிரதி வாணிப அத்தியட்சகர் ஜே.என். இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
பயணி ஒருவருக்கு ஐந்து ஆசனங்களுக்கு மேல் வழங்காது மட்டுப்படுத்தப்படுவதோடு, அப்பயணிக்கு வழங்கப்படும் டிக்கெட்டுக்களில் அடையாள அட்டை இலக்கங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பெறப்படும் அடையாள அட்டைக்குரிய பயணிகளே, குறித்த ரயிலில் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும், திரு இந்திபொலகே மேலும்
சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்புதிய நடைமுறை மூலம், பயணிகளுக்குத் தேவையான உரிய வசதிகள் கிடைப்பதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.