நிந்தவூரில் வெள்ளிக்கிழமை அவரை வரவேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறியவை வருமாறு:
யாரூடாக எதைச் சாதிக்கலாம் என்பதை அறிந்து அதன்பின்னர் நிந்தவூர் வைத்தியசாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டேன்.
எமது மக்களின் நலனையும் வைத்தியசாலைகளின் பௌதீக தேவைகளையும் கவனத்தில் கொண்டு ஒவ்வேறு கண்,காது, சிறுவர், மகளிர் மகப்பேற்று, அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகளை வைத்தியசாலைகளில் உருவாக்கி சகல பிரதேசத்திலும் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முயற்சியினை முன்னெடுத்து வருகின்றேன்.
எமது பிரதேசம் பொது மற்றும் போதனா வைத்தியசாலைகள் இல்லாத பிரதேசமாகக் காணப்படுகின்றது. இந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கு சகல பிரதேச வைத்தியசாலைகளிலும் ஒவ்வொறு விசேட வைத்திய பிரிவுகளை உருவாக்கி அவற்றின் ஊடாக பொது மற்றும் போதனா வைத்தியசாலைகளை உருவாக்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறேன்.
நான் இந்த 51 நாட்களில் அமைச்சர் பதவி இல்லாமல் போனதையிட்டு கவலையடையவில்லை. எமது மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்து மக்களிடம் கையளிக்க முடியாமல் போய்விடுமே என்றுதான் கவலைப்பட்டேன்.
ஆனால்,இறைவனின் ஏற்பாட்டில் உங்களுக்கு சேவையாற்ற மீண்டும் ஒரு படி உயர்வாக சுகாதார இராஜங்க அமைச்சராக வந்துள்ளேன்.
நிந்தவூர் பிரதேச சபை என்னால்கொண்டு வரப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. நகர திட்டமிடல் அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 40 மில்லியன் ரூபாய் நிதி திருப்பி அனுப்பப்ட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது நிந்தவூர் பிரதேசத்தில் பிரதமருடைய நிதியில் இருந்து 600 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீதி அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது. அதனை தடுப்பதற்கு பிரதேச சபை பல முட்டுக்கட்டைகளைப் போட்டன.
இவ்அபிவிருத்தி பைசல் காசீமுக்கு சொந்தமானதல்ல உமது ஊர் மக்களுக்கு சொந்தமானது.நிந்தவூர் பிரதேச சபையினை ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸ் கையில் கொடுத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. சபை மாற்று கட்சிக்கு சென்றதால் எனது அபிவிருத்தி வேலைத்திட்டதின் வேகம் குறைவடைந்துள்ளது.-என்றார்.