காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி-03, சென்றல் வீதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த திரவ உணவு உற்பத்தி தொழிற்சாலையோன்று காத்தான்குடி நகர சபை தவிசாளருக்கு கிடைக்கப்பபெற்ற தகவலை அடுத்து (30) இன்று பி.ப 5 மணியளவில் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம் அஸ்பர் மற்றும் சுகாதார பரிசோதகரினரால் சுற்றிவளைக்கப்பட்டன.
இத்தொழிற்சாலையினை வெளி ஊரைச்சேர்ந்த நபர் ஒருவரே வாடகைக்கு இடம் எடுத்து இதை நடாத்தி வந்துள்ளார்.
சட்டவிரோத பொருட்கள் அனைத்தையும் சுகாதாரப் பரிசோதகர்கள் கைப்பற்றியதுடன் உரிமையாளரும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
விலை குறைந்த தரமற்ற பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் இதன்போது கருத்துத் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக திரவ உணவுப்பொருள் உற்பத்தி செய்து வந்த இடம் சுகாதார பரிசோதக பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(படம்: சப்ரி பசீர்)