அஜித் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்திருக்கிறார்.
சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. ரஜினி நடித்த 'பேட்ட' படத்துடன் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. முன்னதாக இப்படத்தின் 'அடிச்சுத் தூக்கு' என்ற ஓப்பனிங் பாடல் இணையத்தில் வெளியானது. இதற்குக் கலவையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் தூக்குதுரைக்காக ஓப்பனிங் சாங் ஒன்றை எழுதித் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டார் கவிஞர் பொத்துவில் அஸ்மின். அவரின் வரிகளை அஜித் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்க, அதை முறையாக இசையமைத்துப் பாடலாக வெளியிட முடிவு செய்தார் அஸ்மின்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கல்லூரியில் மாணவர்களுக்கு பியானோ கற்பித்து வரும் இசையமைப்பாளர் தஜ்மீல் ஷெரீப் இப்பாடலுக்கு இசையமைத்தார். அஜித் ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் மாஸான வரிகளோடு வெளியாகியுள்ள இப்பாடலை, ஏராளமானோர் கொண்டாடி வருகின்றனர்.
படத்தில் உள்ள 'அடிச்சுத் தூக்கு' பாடலுக்கு பதிலாக, இந்தப் பாடலையே படத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
கவிஞர் பொத்துவில் அஸ்மின் வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர், தேசிய விருது பெற்றவர். விஜய் ஆண்டனி நடித்த 'நான்' படத்தில் 'தப்பெல்லாம் தப்பே இல்லை' என்ற பாடலை எழுதியவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது, இவர் எழுதிய 'வானே இடிந்ததம்மா' பாடல், பலராலும் பாடப்பட்டு பகிரப்பட்டது. தற்போது அஜித்துக்காக ஒரு மணிநேரத்தில் முழுப்பாடலையும் எழுதியுள்ளார்.
https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25796838.ece?fbclid=IwAR3VoNT5grSpQbSDRIMkZsSAX8gB26qsjFzsRYp0XClFLT0QkARjuDj_vLs
https://www.vikatan.com/news/cinema/145152-lyricist-asmin-wrote-song-for-ajith.html?fbclid=IwAR2NuIotrmQ2E6vyaTNiI5YrWxfZ7x9x81SHOGHrFJJoHezRc4jGmlple_c
https://www.youtube.com/watch?v=KXzjV6nlmAk&start_radio=1&list=RDKXzjV6nlmAk