கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதான நிகழ்வும் துஆ பிரார்த்தனையும்.

தேசிய அனர்த்த பாதுகாப்பு, சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (26) கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதான நிகழ்வும் துஆ பிரார்த்தனையும்.
எஸ்.அஷ்ரப்கான்-
தேசிய அனர்த்த பாதுகாப்பு, சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (26) கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதான நிகழ்வும் துஆ பிரார்த்தனையும் கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட வளாகத்தில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீரின் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது, பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே. ராஜதுரை, அனர்த்த நிவாரண அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர். அஹமட் நபாயிஸ் உட்பட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் இணைந்து துஆ பிரார்த்தனை மற்றும் சிரமதானத்தில் ஈடுபட்டதுடன், துஆ பிரார்த்தனையை மெளலவி எம். நெளபர் நிகழ்த்தினார்.


இங்கு உரையாற்றிய கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர், நாங்கள் இந்த அனர்த்த பாதுகாப்பு, சுனாமி நினைவு தினத்தில் வெறுமனே துக்கம் அனுஷ்டிப்பவர்களாக மாத்திரம் இருக்கக் கூடாது. மாறாக எதிர்கால சமூகத்திற்கு சமூக சேவை மூலம் எமது பங்களிப்பை வழங்க வேண்டும். இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பு பெறும் முன்னாயத்தங்களை செய்ய வேண்டும். எமது ஒவ்வொருவருடைய வீட்டையும், வீட்டுச் சூழலையும் பாதுகாத்து சிரமதானம் செய்து டெங்கற்ற பிரதேசமாக மாற்ற வேண்டும். அப்போதுதான் நாம் இயற்கையை நேசித்த புனித மனிதர்களாக கருதப்படுவோம். இன்று எம்மில் பலர் பொடு போக்காக இருப்பதால் தான் இயற்கை அனர்த்தங்கள் எம்மை வாட்டி வதைக்கிறது.

அது போல் அரச உத்தியோகத்தர்களாகிய நாங்களும் மக்கள் சேவையை மனதிற் கொண்டு செயலாற்ற முன்வர வேண்டும். அரச உதவிகள், சேவைகள் பொது மக்களின் 20 சதவீத பங்களிப்புடன் தான் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது. அதனால் பொதுமக்களும் இணைந்துதான் தமது சேவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இன்றைய நாளில் கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்த எமது உறவுகருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -