ஏற்கனவே, ஜனாதிபதியின் கீழ் இதுவரை இயங்கிய நிறுவனங்கள் அவ்வாறே செயற்படும் எனவும், அவற்றுக்கு மேலாக பொலிஸ் திணைக்களமும், அரச ஊடக நிறுவனங்கள் ஒன்றோ அல்லது இரண்டோ என்பன சேர்க்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதியின் கீழுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சை, ஜனாதிபதி கொலை சதி முயற்சி குறித்த விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் பிரதமர் ரணிலிடம் ஒப்படைக்கவுள்ளதாக ஐ.தே.க.யின் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கத்துடன் ஜனாதிபதி முறுகல் நிலையில் காணப்படுவதனால், ஊடகங்கள் ஜனாதிபதிக்கு எதிராக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கின்றது. இதனால், ஜனாதிபதி சில அரச ஊடகங்களை வைத்திருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகின்றது.
எதிர்வரும் தேர்தல்களின் போதும், அரசாங்கத்திலுள்ள ஐ.தே.கட்சியானது தனது பிரச்சாரத்துக்கு அரச ஊடகங்களைப் பயன்படுத்தும் என்ற அச்சம், பொதுவாகவே எதிர்க் கட்சியிடம் காணப்படுகின்றமை தவிர்க்க முடியாதது.(டைமி)