ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில் 'எழுச்சிபெற்று எழுவோம்' எனும் தொனிப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரியபள்ளிவாசல் முன்பாக நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான சட்ட முதுமானி ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பெருந்திரலானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சராக பதவியேற்ற ரவூப் ஹக்கீம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோரை வாழ்த்தி கல்முனை பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பொது அமைப்புகளினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம். றக்கீபின் சேவையினையும் பாராட்டி பொன்னாடை போர்த்தினர்.