மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் சீரழிந்து காணப்படுகின்றது - அமீர் அலி.


அபூ நமா-
தேசியத்தில் தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளைப் படைத்த நம் சமூகத்தின் தனியான கல்வி வலயம் தற்போது சீரழிந்து காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கல்குடா சர்வதேச பாடசாலையின் 12 வது மாணவர் வெளியேற்று விழா 15 ம் திகதி சனிக்கிழமை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு பேசுகையில்,
எதிர் காலத்தில் கல்வி ரீதியான கூட்டமொன்றை நாங்கள் ஏற்பாடு செய்யவுள்ளோம் இந்தப் பிரதேசத்திலிருக்கின்ற அதிபர்கள், பிரமுகர்கள் எல்லோரையும் அழைத்து கடந்த காலத்தில் கல்விப் பணிப்பாளர்களாக கடமையாற்றிய செய்னுதீன் மற்றும் அஹமட் லெவ்வை ஆகியோர்களின் காலத்தில் எவ்வாறு நாங்கள் குழு அமைத்து செயற்பட்டோமோ அந்தப் பணியையும் நாங்கள் தொடர்ந்தேச்சியாக செய்யவுள்ளோம்.

புதிதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பணிப்பாளர் உமர் மௌலானா அவர்களுக்கு அதிக சுமை, அதிக கஷ்டமிருக்கிறது இந்த விடயத்தில் ஒரு நடுநிலையாளனாக இருந்து உங்களுக்கு தோள் கொடுக்கத் நான் தயாராக இருக்கின்றேன்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் சீரழிந்து வீழ்ந்து கிடக்கிறது அங்கே கத்தமோதி புக்கை காய்ச்சாத குறையிருப்பதாகத்தான் நான் நினைக்கின்றேன்.
எனவே நீங்கள் அக் கல்வி வலயத்தை மீட்டுத்தர வேண்டும் என்று வலயக் கல்விப் பணிப்பாளரிடம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -