நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் 86 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாண்டிருப்பு கடற்கரை வீதி அபிவிருத்திப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை கல்முனை மாநகர சபை உறுப்பினர் வீ. புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான சட்ட முதுமானி ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ;ட சட்டத்தரணி ஏ.ம். றகீப், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார், பொறியியலாளர் ரீ. சர்வானந்தன், கல்முனை மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ; உள்ளிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.