பஹ்த் ஜுனைட்-
காத்தான்குடி நகர சபையின் 2018 ஆண்டிற்கான இறுதி சபை அமர்வு வியாழக்கிழமை (20) அன்று நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.
நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற இச் சபை அமர்வில் காத்தான்குடி நகரினை முழுமையாக கண்காணிக்கும் வகையில் நகர் முழுவதும் கண்காணிப்பு கமராக்கள் பொருத்துதல் மற்றும் நகரத்தில் இடம்பெறும் குற்றங்களை தடுக்கும் வகையில் நகர சபைக்கான பாதுகாப்பு பிரிவாக நகர சபைக்கான பாதுகாப்புப் படை (Urban Council Security Force-UCSF)
ஒன்றையும் அமைப்பது தொடர்பான தவிசாளரின் விஷேட திட்டத்திற்கு சபை அங்கீகாரமும் ஏகமனதாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெறிவித்தார்.