காரைதீவில் கடலுக்குள் சென்று சுனாமி வழிபாடு!

காரைதீவு மீனவர்சமுகமும் இந்துசமய விருத்திச்சங்கமும் இணைந்து
ஏற்பாடுசெய்த 14வருட சுனாமி நினைவுதின நிகழ்ச்சி காரைதீவு கடற்கரையில்
(26) புதன்கிழமை காலை இடம்பெற்றது. முதலில் கடற்கரையிலுள்ள
நினைவுத்தூபி முன்றலில் சுனாமிச்சுடர்கள் ஏற்றப்பட்டு விசேடபூஜை
நிகழ்த்தப்பட்டு பின்னர் கடலுக்குள் சென்று சுனாமி புஸ்பாஞ்சலி
நிகழ்த்தப்பட்டது. கரையில் நின்றோர் கடற்றகரையில் மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டனர். காரைதீவ பிரதேச செயலாளர் வெ.ஜெகதீசன் தவிசாளர் கி.ஜெயசிறில் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டார்கள். ஆலயபிரதமகுருக்களான சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் சிவஸ்ரீ சாந்தருபன் ஜயா ஆகியோர் ஆத்மார்த்த பூஜைகளை நடாத்தினர். பெருந்திரளான காரைதீவு மக்கள்
கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திதைக்காணலாம்.

படங்கள் காரைதீவு குறூப் நிருபர் சகா-








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -