தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது- ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு


மிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பத்தில் சிக்கல் நிலை உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரையும் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
குற்றமிழைத்த விடுதலைப் புலிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அவர்களில் பலர் வெளிநாடுகளில் வாழுகின்றனர்.
நாட்டுக்காக போராடிய இராணுவத்தினர் மாத்திரம் ஏன் குற்றச்சாட்டுகளுக்காக நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.

சிறையில் உள்ள விடுதலைப் புலி சந்தேக நபர்களை விடுவிப்பதாயின், குற்றச்சாட்டுகளின் சிறையிலுள்ள இராணுவத்தினரும் அவ்வாறே விடுவிக்க வேண்டும். இராணுவத்தினரை விடுவித்தால் மாத்திரமே தமிழ் கைதிகளை விடுவிக்க அனுமதிப்பேன் என ஜனாதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வின் போது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றிய ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -