வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளான மக்களுகாக நிவாரண பொருட்கள் சேகரிப்பு

வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளான மக்களுகாக நிவாரண பொருள் சேகரிப்பினை தாம் ஆரம்பித்துள்ளதாக வலிகாமம் கிழக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

வன்னி மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பினால் பெருந்தொகையான குடும்பங்கள் நிர்க்கதி நிலையினை அடைந்துள்ளனர்.

அம் மக்களுக்கு வலி கிழக்கு பிரதேசத்தில் இருந்து இயன்ற உதவியினை நல்கும் வகையில் நிவாரண உதவிகளை சேகரிக்கும் பணியினை எமது பிரதேச சபையின் உறுப்பினர்கள்இ உத்தியோகத்தர்கள்இ பணியாளர்கள்இ ஈடுபட்டுள்ளோம்.


இன்று ஞாயிற்றுக்கிழமை அனர்த்த நிலைமையினைக் கருத்தில் கொண்டு எவ்வாறாக மக்களின் நிலைமைகளில் பிரதேச சபை தொழிற்பட வேண்டும் என்ற கலந்துரையாடலினை பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைமை தாங்கும் உறுப்பினர்களை அழைத்து அவசரமாகப் பேசியிருந்தோம். அதில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் வலி கிழக்கு பகுதிகள் தோறும் மதியம் முதல் ஒலிபெருக்கி வாயிலாக மக்களுக்கான நிவாரணப்பொருட்களை சபையில் நாளை திங்கட்கிழமை காலை கையளிக்க முடியும் என்பது தொடர்பில் உத்தியோகத்தர்களைக் கொண்டு அறிவித்துள்ளோம்.


மேலும் நாளை திங்கட்கிழமை காலை எம்மால்; வலிகாமம் கிழக்கின் பிரதான வீதிகள் தோறும் பிரதேச சபையின் வாகனத்தில் உனவுப்பொருட்கள் சேகரிக்கப்படவுள்ளது. இதேவேளை பிரதேச சபை உறுப்பினர்களும் தம்மால் இயன்ற உலருணவு உதவிப்பொருட்களை பங்களிப்பினை வழிங்குவதற்கு முன்வந்துள்ளனர். இவ் உதவிகள் அனைத்தும் உரியவாறு சேகரிக்கப்பட்டு வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடைத்தங்கள் முகாம்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு விரைவில் கையளிக்கப்படவுள்ளன.

உதவிப்பொருட்களை வழங்க விரும்புபவர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் நேரிலோ அல்லது ஒலிபெருக்கி அறிவிப்புடன் வலி கிழக்கில் நிவாரணப் பொருள் சேகரிப்பில் ஈடுபடும் வாகனத்திலோ கையளிக்க முடியும் எனவும் பலரும் முன்வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதிவித்திட்டத்தினை நல்க வேண்டும் எனவும் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -