தனியான நகர சபை என்பது பல அரசியல் கட்சிகளாலும் தலைமைகளினாலும் வாக்குறுதியளிக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு, நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருந்து வந்ததன் விளைவாகவே சாய்ந்தமருது மக்களின் அதிகபட்ச ஆணையை பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே அமைச்சர் ஹரீஸ் கடந்த உள்ளூராட்சி தேர்தலின்போது இம்மக்களின் பாரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால் தற்போதய சூழலில் சாய்ந்தமருது மக்களின் இக்கோரிக்கை தொடர்பில் கடந்த கால கசப்புணர்வுகளை இரு தரப்பினரும் மறந்து தனிப்பட்ட சுயநலன்களுக்கு அப்பால் ஊரின் நன்மை கருதி செயல்பட வேண்டிய தருணமாகவே சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் இதனை பார்க்கிறது.
தனியான உள்ளூராட்சி மன்ற கோரிக்கை மீதான உண்மையான பற்றாளர்களும் மக்களும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவர்களுக்கு தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, இலக்கை அடைந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்துவதே புத்திசாலித்தனமாகும்.
நமது இலக்கு தனியான உள்ளூராட்சி மன்றமே. திறந்திருக்கும் பாதையை நமக்கானதாக ஆக்கிக்கொள்வோம்.