முன்னாள் உறுப்பினர் ரஹ்மானுக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை


அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை (18) பிற்பகல் 2.00 மணி தொடக்கம் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பான அழைப்புக் கடிதம், மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மாநகர செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அமர்வின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் வழமையான சபை நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான இசட்.ஏ.எச்.ரஹ்மான் அவர்களின் மறைவுக்கான அனுதாபப் பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளது. இப்பிரேரணையை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் சமர்ப்பிக்கவிருக்கிறார்.
2011ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு, வெற்றியீட்டி 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 31ஆம் திகதி, சபை கலைக்கப்படும் வரை உறுப்பினராக பதவி வகித்த இசட்.ஏ.எச்.ரஹ்மான், கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற மாநகர சபைத் தேர்தலிலும் சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்டதுடன் அதன் பட்டியல் உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
எனினும் கடந்த ஒக்டோபர் 01ஆம் திகதியன்று பொலிஸ் துறையில் அவர் மீண்டும் இணைந்து கொண்டதுடன், மாநகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார். இவ்வாறு திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி வந்த நிலையில் தனது 53ஆவது வயதில் கடந்த 05ஆம் திகதி அவர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -