ஜனநாயக வழிப் போராட்டமே எமக்கு கிடைத்த பாரிய வெற்றி வெற்றி


ஹஸ்பர் ஏ ஹலீம்-
நாட்டின் அரசியல் நிலை சீர்குலைவுக்கு எமது ஜனநாயக ரீதியான போராட்டமே எமது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. நீதித் துறை நீதியை நிலை நாட்டியுள்ளது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.
அண்மைக் காலமாக நாட்டின் அரசியல் குழப்பங்கள் தொடர்பில் இன்று திங்கட் கிழமை மாலை கிண்ணியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தற்போதைய ஜனாதிபதியை ஐந்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை கட்சிகள் 60 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை அளித்து ஜனாதிபதியாக்கினோம்.

ஜனநாயகத்தை தனது அரசியல் வரலாற்றில் இருந்து சீர்குலைத்து கடந்த இரு மாதங்கள் பல பின்னடைவுகளை இலங்கை தேசம் கண்டு கொண்டது அபிவிருத்திகள் முடக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்புரிமைக்கான இடைக்காலத் தடை என பல அரசியல் குழப்பங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது.
இதற்கான தீர்வை பொறுமையோடு போராடிய போது பொறுமைக்கு கிடைத்த வெற்றியை நீதிமன்றம் நீதியை நிலை நாட்டியுள்ளது நீதி நாட்டில் உயிர் வாழ்கிறது .
பாராளுமன்றத்தின் உள்ளே சபாநாயகரும் வெளியே நீதிமன்றமும் சட்டத்தை பாதுகாத்து அரசியல் சாசனத்தின் படி உறுதியான தீர்ப்பு வெளிப்படையாக வெளிக்காட்டப்பட்டது.
2019 ம் ஆண்டின் வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தின் ஊடாக பல்வேறு பொருளாதார முன்னேற்றங்களை கொண்டு வர வேண்டும் நீதி துறை, பொலிஸ் ஆணைக் குழு செயல்பட்டு ஊழல் மோசடிகளை ஒழிக்க வேண்டும் நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டும் தொழில் துறை, துரித அபிவிருத்தி , என்பன குறுகிய கால கட்டங்களில் இடம் பெறுவதற்கு வழி வகைகளை பிரதம அமைச்சரவை ஊடாக மேற்கொள்ள உறுதியாக சிறுபான்மைக் கட்சிகளும் செயற்படும்.
சிறுபான்மை சமூகத்தை வேறொரு கோணத்தில் பார்க்க தொடங்கிய போதும் பதவி பட்டத்துக்கு அடிமையற்று ஜனநாயகத்தை பாதுகாக்க சக சிறுபான்மைக் கட்சிகளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், தமிழர் விடுதலை கூட்டணி, ஹெல உறுமய, மலையக முன்னனி என்பன ஒன்றினைந்து ஜனநாயம் பாதுகாக்கப்பட்டது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -