யாழ்ப்பாணத்தில் இந்திய பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (19) காலை யாழ். கொட்டடி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணும் அவரது கணவரும் இந்தியாவில் இருந்து வந்து வாடகை வீடொன்றினை பெற்று புடவை வியாபாரம் செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் கடந்த சில தினங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த பெண்ணின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.