கதிரவெளி பொது நூலகம் தொடர்ச்சியாக நான்காவது முறையும் விருது வழங்கி கெளரவிப்பு



எம்.ரீ. ஹைதர் அலி-
தேசிய நூலக ஆவணாக்கல் சேவைகள் சபையால் வாகரை பிரதேச சபையின் கதிரவெளி பொது நூலகம் தொடர்ச்சியாக நான்காவது முறையும் விருது வழங்கி கெளரவிப்பு
கல்வியமைச்சின் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் வருடாந்தம் பாடசாலை நூலகங்கள் மற்றும், உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் இயங்கும் பொது நூலகங்கள், வாசிப்பு நிலையங்கள் ஆகியவற்றுக்கிடையே நடாத்துகின்ற போட்டிகளில் கலந்து கொண்டு, தெரிவு செய்யப்படும் நூலகங்களூதாக எதிர்கால கல்வித் திட்ட முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் செயற்பாடாக முன்னெடுத்து வருகின்றது.
இத்தெரிவு போட்டிக்காக நூலகத்தின் தன்மை, வாசகர்களை கவரும் வகையிலான நவீன முறை செயர்பாடு, நூல்களை காட்சிப்படுத்தல், மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நிகழ்வுகள் என்பவற்றை நோக்காக கொண்டு சிறந்து விளங்கும் நூலகங்கள் விண்ணப்பித்திருந்தன.

இவ்வாண்டுக்கான (2018) தேசிய வாசிப்பு மாத விழா நிகழ்வை பரைசாற்றும் வகையிலாக கடந்த 13.12.2018 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவானது, தேசிய நூலக ஆவணாக்கள் சபையின் தலைவர் திரு.பி.எம்.தீபால் சந்திர ரத்ண தலைமையில் கொழும்பு பத்தரமுல்ல அபேகம மஹவலவ்வே மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இதன் போது 2017 ஆம் ஆண்டுக்காக நாடளாவிய ரீதியிலும், மாகாண மற்றும், மாவட்ட அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பல்வேறு நூலகங்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டன.
அந்த வகையில் இவ்விருதினை பெற்றுக்கொள்வதற்கான தனித்துவமான இடத்தினை தொடர்ச்சியாக பேணும் வகையில, நான்காவது முறையும் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் கீழ் இயங்கும் கதிரவெளி பொது நூலகம் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டிருந்தது.

2017 ஆம் ஆண்டின் மட்டக்களப்பு மாவட்டதிற்கான சிறந்த நூலகமாக தெரிவு செய்யப்பட்டே இவ்விருவிருது வழங்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த 2014 இல் மாவட்ட ரீதியிலும், 2015 இல் தேசிய ரீதியில் மூன்றாவது இடத்தினையும், 2016 ஆம் ஆண்து மாவட்ட ரீதியிலும் தேசிய நூலக ஆவணாக்கல் சபையினால் சிறந்த நூலகமாக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விருது பெறும் நிகழ்வில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் கெளரவ.தவிசாளர் சி.கோணலிங்கம் மற்றும், கதிரவெளி பொது நூலகர் ஜனாப்.எம்.சி.செரீப் ஹுசைன் ஆகியோர் பேராசிரியர் பரணவிதானவிடமிருந்து இவ்விருதைப் பெற்றுக்கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -