அதாவுல்லாஹ்வின் செயல்பாடுகள் ரிசாத் அணிக்கு சாதகமாவே அமைகிறது.

எம்.எம்.நிலாம்டீன்-

நாட்டில் விரைவில் நடக்கவுள்ள பொது தேர்தல் அல்லது மாகாண தேர்தல் எந்த தேர்தலாக இருந்தாலும் உதுமாலப்பை அமைச்சர் ரிசாத் அணி கொண்ட மயிலில் போட்டியிடும் நிலையொன்று காணப்படுகின்றது. இதை நாம் எமது செய்தி தேடலில் அறிந்தவை.


உதுமாலப்பை அதாவுல்லாவோடு முரண்பட்டதும் ரிசாத் அணி உதுமாலப்பையை அரவணைத்துக் கொண்டது .பலசுற்றுப் பேச்சுவர்த்தைகள் மூலமாக உதுமாலப்பை ரிசாத் அணியோடு சங்கமித்து விட்டார் ,இப்போது ஒன்றும் அவசரம் இல்லை தேர்தல் ஒன்று வரும்போது உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளலாம் என்று இணக்கம் காணப்பட்டுள்ளது .


தேர்தல் ஒன்று வரும்போது அட்டாளைச்சேனையில் அமைச்சர் ரிசாத்துக்கு ஒரு விழா வைத்து அந்த மேடையில் உத்தியோகபூர்வமாக உதுமாலப்பையுடன் அவரது ஆதரவாளர்கள் இணைந்து கொள்ளவுள்ளார்கள். இதை இல்லை என்று உதுமாலப்பை மறுப்பு தெரிவிப்பாரா?


அதாவுல்லாஹ்வின் ஒவ்வொரு செயல்பாடும் ரிசாத் அணிக்கு நல்ல சாதகமாவே அமைந்து விடுகின்றது.அம்பாறையில் ரிசாத் காங்கிரஸ் என்பது தவிர்க்க முடியாத அணி ..இந்த அணி என்பது ஹக்கீம் காங்கிரஸ் அணிக்கு சவாலான அணி. அம்பாறையில் அரசியல் மோதல் என்பது ஹக்கீம் காங்கிரஸ்க்கும் ரிசாத் அணிக் கொண்ட மயிலுக்குமான மோதல் இந்த மோதலில் அதாவுல்லாஹ் இல்லை.


அதாவுல்லாஹ் ஹக்கீம் காங்கிரஸ் அல்லது ரிசாத் காங்கிரஸ் அணியில் இருந்து ஏதாவது ஒரு அணியில் இணைந்து போட்டியிட்டால் மட்டுமே அவர் வெற்றி பெற முடியும். அதை விட்டு மொட்டில் அல்லது சுதந்திரக்கட்சியில் அதாவுல்லாஹ் போட்டியிட்டு   வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவுல்லாஹ் தனது கட்சியை கிழக்கில் வழர்க்க தவறி விட்டார் .கிழக்கில் ஹக்கீம் காங்கிரஸ் அணிக்கு எதிரான கீரைக் கடைக்கும் ஒரு எதிர்க்கடை தேவை என்ற நிலை கடந்த 10 வருடமாக இருந்து வருகின்றது.அந்த தேவையை அறிய அதாவுல்லாஹ் தவறி விட்டார்.அது குறித்தான அறியும் தன்மைக்கும் அவருக்குமான இடைவெளி அதிகரித்தே காணப்பட்டது.


அதாவுல்லாஹ் அதிகாரத்தில் இருந்த போது அவர் மக்களோடு இருக்கவில்லை மக்கள் நெருக்கத்தை தவிர்த்து வந்தார். ஹக்கீமை எதிர்த்து கிழக்கில் இருந்து ஹக்கீமை துரத்தும் மிக நல்ல வாய்ப்பு அதாவுல்லாஹ் கையில் இருந்தது. ஆனால் அதாவுல்லாஹ் தனக்கு தானே ஒரு இரும்பு வேலி அமைத்து அதற்குள் ஒதுங்கி கொண்டார் .அவரை சுற்றி ஒரு கூட்டம் இன்னும் அதே வெளியை அமைத்துக் கொண்டு மக்கள் சந்திப்பை தவிர்ப்பதும் ஊடகர்களை நெருங்குவதை தவிர்த்தும் வருகின்றார்கள். குறைகள் நிறைகள் சொல்லக்கூடிய நெருக்கத்தை இன்னும் அதாவுல்லாஹ் கொண்டிருக்கவில்லை .அதாவுல்லாஹ் தனியாக நின்று வெற்றி பெற முடியாத நிலை.


இப்போது ஹக்கீமை கிழக்கை விட்டு துரத்தும் கடிவாளம் வாய்ப்பு ரிசாத்திடம் வந்துள்ளது. கிழக்கில் கீரைக் கடைக்கும் ஒரு எதிர்க்கடை என்ற கடை அமைச்சர் ரிசாத்திடம் கிடைத்துள்ளது .அவர் நன்றாக வாய்ப்பை பயன் படுத்தினால் எதிர்வரும் பொது தேர்தல் முடிவுகள் ஹக்கீம் காங்கிரசை விட 2 – 3 எம்பிக்கள் அதிகமாக ரிசாத் பெறுவார் .அதன்மூலம் முஸ்லிம்களின் ஏகபிரதிநிதி ரிசாத் என்ற நிலை உருவாகும் ..இந்தியாவை சுற்றி சீனா வளைத்துள்ளது போன்று கிழக்கை ரிசாத் தனது பிடிக்குள் கொண்டு வருவார். ..


நாட்டில் விரைவில் நடக்கவுள்ள தேர்தல் இதற்க்கான விடையினைக் கொடுக்கும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -