-மன்னார் நகர தவிசாளர் முஜாஹிர் கோரிக்கை-
எஸ்.எச்.எம்.வாஜித்-மன்னார்,புதுக்குடியிருப்பு ஸலாமீயா அரபுக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பும், வெள்ளிபெற்ற போட்டியாளர்களுக்கான நிகழ்வும் மதுரசாவின் தலைவர் பவாஸ் மௌலவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வின் பிரதம அதிதியாக மன்னார் நகர பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில்;
இஸ்லாமிய கல்லூரியில் இருந்து இந்த சமூகத்திற்கு பிரயோசனம் உள்ள மாணவர்கள் வெளியேற வேண்டும் நிங்கள் கற்றுக்கொள்கின்ற மார்க்க கல்வியின் ஊடாக ஏனைய மாணவர்களும் பிரயோசனம் அடைய வேண்டும்.
இது போன்று இன்றைய வயது இளைஞர்கள் அதிகமானவர்கள் போதைகளுக்கு அடிமையாகி சமூகத்திற்கும்,பொற்றோர்களுக்கும் பிரயோசனமில்லாமல் தங்களுடைய கால நேரங்களை செலவு செய்கின்றதை கண்ணால் காணக்கூடியதாக இருக்கின்றது.
பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் அவர்களுடைய நாளாந்த நடவடிக்கை பற்றி அதிக கரிசனை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இன் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்,பள்ளிவாசல் தலைவர், பொற்றோர்கள் மற்றும் ஊர் நலன் விரும்பிகள் கலந்துகொண்டார்கள்.
அத்துடன் சான்றிதழ்கள்,பரிசளிப்புகள் இடம்பெற்றன.