போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம், புகைத்தல் மற்றும் குடும்ப வன்முறைகளுக்கெதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் மூன்று கிலோ மீற்றர் தூரம் விழிப்புணர்வு ஊர்வலத்திலும் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு- செங்கலடி கிறிஸ்தவ குடும்ப சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் ஊர்வலம் போதகர் எஸ். ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்றது.
செங்கலடி பிரதேசத்திலிருந்து ஆரம்பமான இந்த ஊர்வலம் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதிவழியாக ஏறாவூர் மணிக்கூட்டுக்கோபுரச்சந்தியை கடந்து புன்னக்குடாவீதி வழியாகச் சென்று பொதுச்சந்தை முன்றலில் தரித்தது.
பின்னர் அங்கிருந்து புகையிரத நிலையவீதிவழியாக ஆலயத்தைச் சென்றடைந்தது.
ஊர்வலத்தின்போது துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
பெரும்எண்ணிக்கையிலான வாகனங்களும் பவனிச்சென்றன.
சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக நலன்விரும்பிகள் பலரும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.